search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேத்தி, ஜெகதளா பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு
    X

    கேத்தி, ஜெகதளா பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு

    நீலகிரி மாவட்டம் கேத்தி, ஜெகதளா பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட ராஜ்குமார் நகர் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் 20162017 ஆம் நிதியாண்டின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, எல்லநள்ளி பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வடிகால் கால்வாயிணை சீர் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    நேர்கொம்பை ஆதி திராவிடர் காலனி பகுதிகளில் 20162017 ஆம் நிதியாண்டில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணிகளை துவங்காத பயனாளிகளை சந்தித்து அவர்களிடம் பணிகளை துவங்குமாறும், அரசு நிதியை பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தி, அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர்வசதிகள் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2017-2018 ஆம் நிதியாண்டின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் 2018-2019-ம் நிதியாண்டின் கீழ் திருவள்ளுவர் நகர் பகுதியில் கடப்பாலம் முதல் தேனலை வரை சாலை பணியினையும் பார்வையிட்டு, பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தினார்.

    சாலமூர் பகுதியில் சமுதாய கழிப்பிடம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் தொட்டண்ணி கிராம பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணியினையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேத்தி பாலாடாவில் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கண்டறிந்து அங்குள்ள அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தார்.

    மேலும் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெரு விளக்கு, மின்சார வசதி, சாலை வசதி ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் வசதிக்காக உடனடியாக நீர்தேக்க தொட்டி களில் நீர் நிரப்பி அதன் மூலம் தவறாமல் குடிநீர் கிடைக்க வசதி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் தெரேமியா கிடங்கு பகுதியில் உள்ள கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தடை செய்யப்பட்ட பொருட் களான பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்து வது கண்டறி யப்பட்டு உடனடியாக அபராதம் விதிக்கப்பட் டது. மேலும் அங்குள்ள கடைக்காரர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த கூடாது, மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) குணசீலன், கேத்தி பேரூராட்சி உதவி பொறியாளர் பெருமாள்சாமி, சுகாதார ஆய்வாளர்கருணாநிதி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
    Next Story
    ×