என் மலர்

  செய்திகள்

  சென்னையில் ஒரே நாளில் 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
  X

  சென்னையில் ஒரே நாளில் 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். #goondasact
  சென்னை:

  சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் 9 பேரை கைது செய்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்தார்.

  சூளைமேட்டைச் சேர்ந்த ஜெயபால், குமரேசன், ராஜேஷ், ராஜு, விஜயகுமார், செங்கல்பட்டைச் சேர்ந்த முகமது ஜான், கோடம்பாக்கம் பிரசாத், நுங்கம்பாக்கம் ராஜா, பெரும்பாக்கம் சிவலிங்கம் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  மேலும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி தேவராஜ், கொலை வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூர் லோகநாதன், ஆர்.கே.நகர் ரவுடி தீனதயாளன், பெரியமேடு மணிகண்டன் ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார். #goondasact

  Next Story
  ×