search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி தாக்கல் - கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு
    X

    வருமான வரி தாக்கல் - கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

    வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #IncomeTax
    சென்னை:

    மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர வருமானம் பெறுவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் சில காரணங்களால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை இந்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்தநிலையில் பங்குதாரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படாது என்றும், அக்டோபர் 15-ந் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அபராதம் செலுத்துவதை தவிர்க்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #IncomeTax

    Next Story
    ×