search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கும்பகோணத்தில் வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    கும்பகோணத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மத்திய- மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ 2500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி கடனை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி டெல்டாவை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும், டெல்டாவை பாலைவனமாக்கும் எண்ணை நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×