என் மலர்
செய்திகள்

திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami #KuthiraiyarDam
சென்னை:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை என மொத்தம் 22 நாள்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரால் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #KuthiraiyarDam
Next Story






