என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ரஜினியுடன் சுகன்யாராஜா
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
By
மாலை மலர்19 Sep 2018 9:22 AM GMT (Updated: 19 Sep 2018 9:22 AM GMT)

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரஜினி மக்கள் மன்றத்துக்கு அரசியல் கட்சி பாணியில் அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் ரஜினி மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூர் நாட்டுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியானது.
சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினி உத்தரவிட்டுள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துவந்த சுகன்யாவிற்கு ‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்மூலம் சுகன்யாவிற்கு ரஜினியிடம் நல்ல அறிமுகமும் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூர் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், தந்தையின் பணி காரணமாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. இதுகுறித்து பேசிய சுகன்யா, “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.
ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம். ரஜினி முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என கூறி உள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
ரஜினி மக்கள் மன்றத்துக்கு அரசியல் கட்சி பாணியில் அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினி உத்தரவிட்டுள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்துவந்த சுகன்யாவிற்கு ‘காலா’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்மூலம் சுகன்யாவிற்கு ரஜினியிடம் நல்ல அறிமுகமும் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூர் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சுகன்யாவின் குடும்பம், தந்தையின் பணி காரணமாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறது. இதுகுறித்து பேசிய சுகன்யா, “சிங்கப்பூரில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.
ஆனால் தனித்தனியாக இயங்குகிறார்கள். அப்படி தனித்தனியாக இயங்குபவர்களை ஒன்றிணைப்பதே எங்கள் முதல் நோக்கம். ரஜினி முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்.” என கூறி உள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
Next Story
×