என் மலர்
செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் மீட்கப்பட்ட குழந்தை பராமரிப்புக்கு அரசு மாதந்தோறும் ரூ.2,165 உதவி
வளசரவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பராமரிப்புக்கு மாதந்தோறும் தமிழக அரசு ரூ.2,165 வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #RescueChild
சென்னை:
வளசரவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் பராமரிப்பில் இருந்து வந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவுப்படி அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வழங்கப்பட்டது. இப்போது அந்த குழந்தை சீராக உடல் ஆரோக்கியமாக உள்ளது.
இந்த குழந்தையை தொடர் பாதுகாப்புக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கும் விதமாக அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த குழந்தை காருண்யா தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் வழங்கப்படுவதுடன் குழந்தை பராமரிப்புக்காக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.2,165 வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #RescueChild

Next Story