search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது
    X

    நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது

    நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தற்சமயம் வழக்கதைவிட சற்று குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. #neyvelinlc

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதல் அனல் மின்நிலையம், முதல் அனல் மின்நிலைய விரி வாக்கம், 2-வது அனல் மின் நிலையம், மற்றும் 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கம் என 4 அனல் மின் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த 4 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து 2990 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. தற்போது இவற்றில் இருந்து 1480 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 1510 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

    இது தவிர 2 யூனிட்டுகள் கொண்ட சூரிய மின்சக்தி திட்டங்களும் செயல்படு கின்றன. இவை தலா 10 மெகாவாட் மற்றும் 130 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இவற்றில் இருந்து தற்போது 4.3 மெகாவாட் மற்றும் 46.6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பொதுவாக மழை காலங்களில் நிலக்கரிகளில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும். தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால் இந்த நிலக்கரிகளில் ஈரப்பதம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் என்.எல்.சி. அனல் மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சாதாரண நாட்களைவிட மழை காலங்களில் மின் உற்பத்தி சற்று குறை வாகவே இருக்கும். மேலும் 2-வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் தற்போது மின் உற்பத்திக்கான பரா மரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால் தற்சமயம் இந்த 2-வது அனல் மின்நிலையம் விரிவாக்கத்தில் இருந்து மின் உற்பத்தி தொடங்கவில்லை. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன்பிறகு மின் உற்பத்தி தொடங்கும்.

    சூரிய மின்சக்தி திட்டத் தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் மின் உற்பத்தி சற்று குறைவாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதே காரணமாகும். மேலும் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை உள்ள மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் இந்த சூரிய மின்சக்தி திட்டத்தில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

    இந்த காரணங்களால் தான் நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் தற்சமயம் வழக்கதைவிட சற்று குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது குறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நிலக்கரியின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதிகளான முதல் சுரங்கம், 2-வது சுரங்கம் மற்றும் சுரங்கம் 1 ஏ ஆகியவற்றில் இருந்து கன்வயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படும் என்றனர். #neyvelinlc 

    Next Story
    ×