search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் ஒரு தீப்பெட்டி ஆலை பூட்டி கிடக்கும் காட்சி
    X
    கோவில்பட்டியில் ஒரு தீப்பெட்டி ஆலை பூட்டி கிடக்கும் காட்சி

    முழு அடைப்புக்கு ஆதரவாக கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடல்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து முழு அடைப்புக்கு ஆதரவாக கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
    கோவில்பட்டி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களான மெழுகு, பொட்டாசியம் குளோரைடு, தீப்பெட்டி அட்டை, குச்சி ஆகியவற்றையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்ததாலும், போதிய விற்பனை விலை கிடைக்கவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், இளையரசனேந்தல், கடம்பூர் மற்றும் வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சாலைகளும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மூடப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் உள்ள 20 முழு எந்திர தீப்பெட்டி, 300 பகுதிநேர எந்திர தீப்பெட்டி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் 2000 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.  #tamilnews
    Next Story
    ×