search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் பங்குகள் நாளை செயல்படும் - மாநில தலைவர் முரளி அறிவிப்பு
    X

    பெட்ரோல் பங்குகள் நாளை செயல்படும் - மாநில தலைவர் முரளி அறிவிப்பு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி பெட்ரோல் பங்குகள் வழக்கபோல் செயல்படும் என்று மாநில தலைவர் முரளி கூறியுள்ளார். #PetrolDieselPriceHike
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க மாநில தலைவர் முரளி கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவமும் 4,850 பெட்ரோல் பங்குகள் உள்ளன. தற்போது தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை நிறுத்தினால் பொதுமக்களுக்கு மேலும் இடையூறு ஏற்படும்.

    ஆகையால் பெட்ரோல் பங்க்கை மூடி எதிர்ப்பை காட்ட வேண்டாம் என எண்ணுகிறோம். எனவே நாளை பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×