என் மலர்

  செய்திகள்

  திருப்பத்தூரில் வாலிபால் போட்டி 3 நாட்கள் நடக்கிறது
  X

  திருப்பத்தூரில் வாலிபால் போட்டி 3 நாட்கள் நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
  திருப்பத்தூர்:

  திருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.

  போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.

  இந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பி‌ஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

  வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.
  Next Story
  ×