என் மலர்

    செய்திகள்

    ஐந்தருவியில் தண்ணீர் விழும் காட்சி.
    X
    ஐந்தருவியில் தண்ணீர் விழும் காட்சி.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து சற்று சரிந்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 13 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து சற்று சரிந்து நேற்று 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்தபோது ஒகேனக்கல்லில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயிருனவியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகளை யாரும் குளிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் சினிபால்ஸ், காவிரி ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், சினிபால்ஸிலும் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் மெயினருவியில் மட்டும் குளிக்க இன்றும் 63-வது நாளாக தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை யாரையும் மெயினருவி பகுதியில் அனுமதிக்கவில்லை.

    மேலும், மெயினருவியில் உள்ள சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக மெயினருவி பகுதிகளில் வரும் நீர்வரத்தை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை முடித்த பிறகு மீண்டும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி துறை அதிகாரி தெரிவித்தனர்.

    இதுபோன்று கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்க தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரிசலில் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். வழக்கமான பாதையான மாமரத்துகடுவு பகுதியில் பரிசல் இயக்க இன்றும் அதிகாரிகள் தடைவிதித்து உள்ளனர். நீர்வரத்து மேலும் சரிந்து 5 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக வரும்போதுதான் வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×