என் மலர்
செய்திகள்

மதுரையில் வீடு புகுந்து நகை கொள்ளை
மதுரையில் வீடு புகுந்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#robbery
மதுரை:
மதுரை அய்யர்பங்களா மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 53). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விருதுநகரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story