search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவடிக்குப்பத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    கருவடிக்குப்பத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

    கருவடிக்குப்பத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி சோசலிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இன்று மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற சித்தானந்தா கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது.

    இங்கு ஏற்கனவே அமைந்துள்ள சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகளால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஏற்கனவே உள்ள சாராய-கள்ளுக்கடைகளையும், புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி சோசலிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இன்று மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சோசலிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் முத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சேகர், சுதாகர், பிரளயன், ஏழுமலை, சீனு, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×