search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே மணல் கடத்த லஞ்சம்- வருவாய் ஆய்வாளர் கைது
    X

    வேலூர் அருகே மணல் கடத்த லஞ்சம்- வருவாய் ஆய்வாளர் கைது

    வேலூர் அருகே மணல் கடத்தல் வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் தினேஷ்குமார் (21).இவர் டிராக்டர், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.

    ஊசூர் வருவாய் ஆய்வாளர் அஸ்லம்பாஷா, தினேஷ்குமாரிடம் உங்கள் லாரிகளில் மணல் கடத்தல் வழக்கு பதியாமல் இருக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வேண்டும். அப்போது தினேஷ்குமார், தான் மணல் கடத்தலில் ஈடுபடவில்லை. எதற்கு லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். ரூ.25 ஆயிரம் பணம் தராவிட்டால் மணல் கடத்தல் வழக்கு பதிவு நடவடிக்கை எடுப்பேன் என அஸ்லம்பாஷா மிரட்டினார்.

    இதுபற்றி தினேஷ்குமார் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு ஊசூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அஸ்லம்பாஷாவிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அஸ்லம்பாஷாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×