என் மலர்
செய்திகள்

திண்டுக்கல் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சங்கர் கணேஷ் (வயது 17). திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். நேற்று முன் தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தான். அப்போது பின்னால் வந்த கார் சஙகர் கணேஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேரிகார்டு மீது மோதி படுகாயமடைந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






