search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டையில் 15 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி- போலீசார் குவிப்பு
    X

    நிலக்கோட்டையில் 15 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி- போலீசார் குவிப்பு

    நிலக்கோட்டையில் 15 நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்த கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்கப்பட்டது. முதலில் இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது கடந்த 4 நாட்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் மாவட்ட செயலாளர் பசும்பொன் முத்தையா மதுரை ஐகோர்ட்டு கிளையில் இது குறித்து மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் 15 நிபந்தனைகளுடன் கூட்டம் நடத்த போலீசாருக்கு உத்தர விட்டார்.

    இதனையடுத்து இன்று கூட்டம் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்துக்கு காலை முதலே போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×