search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
    X

    குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

    வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சிறப்பு பயிற்சி மூலம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பில் பயின்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கலெக்டர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர். 

    கோவை மண்டலத்தைச் சேர்ந்த, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று 35 மனுதாரர்கள் அண்மையில், வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட பயிற்சிகளில் பங்கேற்று, ஆர்.திருநாவுக்கரசு என்ற மாணவர் மாநிலத்திலேயே, குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தட்டச்சர் பணிக்காலியிடத்திற்கு முதலாவது மாணவராக தேர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே, அதிகமான எண்ணிக்கையில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் 35 நபர்கள் குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிநியமன வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் பழனிசாமி பாராட்டினார். இந்த வெற்றியினை முதல் வெற்றியாக கருதி தொடர்ந்து நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென அவர் அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, கோவை மண்டலத்தைச் சேர்ந்த துணை இயக்குநர்கள் ஓ.எஸ்.ஞானசேகரன் மற்றும் ஜோதிமணி, உதவி இயக்குநர்கள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×