என் மலர்
செய்திகள்

மறைந்த வாஜ்பாய்க்கு அஞ்சலி- குளித்தலையில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குளித்தலை ஒன்றிய நகர பா.ஜ.க சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது.
குளித்தலை:
குளித்தலையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குளித்தலை ஒன்றிய நகர பா.ஜ.க சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் குளித்தலை பெரியபாலத்தில் தொடங்கி, வைசியாள் தெரு, மாரியம்மன் கோவில் கடைவீதி ஆண்டாள்வீதி, காந்திசிலை, பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சுங்க வாசலை சென்றடைந்தது.
ஊர்வலத்திற்கு குளித்தலை நகர பா.ஜ.க தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் முருகானந்தம், ஒன்றியத் தலைவர் வீரமணி, மாவட்ட பொதுச் செயலாளர் கைலாசம், மாவட்ட துணை தலைவர் ராமநாதன், மாவட்டச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரச்சாரப்பிரிவு தலைவர் சாமிநாதன், நகர பொதுச் செயலாளர்கள் மோகன், சீனிவாசன், செயலாளர்கள் பிரகதீஸ்வரன், ராமன், நகர துணை தலைவர் சங்கிலி, மாவட்ட இளைஞரணிதலை வர் சக்திவேல், ஒன்றிய பொது செயலாளர் கண்ணன், சிவக்குமார், அறிவு ஜீவி, தலைவர் சம்பத் சிவசேனா, கஸ்தூரிரங்கன் நமச்சிவாயம் திமுக விவசாய அணி பாலசுப்பிரமணியன், அவைத்தலைவர்ஹாகுல் ஹமீது, துணைச் செயலாளர் செந்தில்குமார், ம.தி.மு.க நகரச்செயலாளர் ரவிக்குமார், நகர இளைஞரணி தலைவர் பிரதீப், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமரேசன், விவசாய அணி தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story






