search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு குடிநீர் நிறுத்தம்
    X

    சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு குடிநீர் நிறுத்தம்

    சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. #Puzhallake
    சென்னை:

    சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இந்த ஏரிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால் அங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

    சென்னை அருகில் உள்ள சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது வெறும் ஒரு மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    எனவே சோழவரம் ஏரியில் இருந்து கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு நேரடியாக தண்ணீர் அனுப்ப முடியவில்லை. ஆகவே 3 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. தண்ணீர் மிகவும் குறைந்ததால் சோழவரம் ஏரியில் இருக்கும் நீர் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் தற்போது 783 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. பூண்டியில் 14 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 486 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது. சோழவரத்தில் 1 கன அடி இருக்கிறது.

    சென்னையில் உள்ள 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. ஆனால் தற்போது ஆயிரத்து 284 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளது. #Puzhallake


    Next Story
    ×