search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறியால் வாகன ஓட்டிகள் பீதி
    X

    தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறியால் வாகன ஓட்டிகள் பீதி

    வேலூர் பகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறியால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் பகுதிக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்பதுபோல் இரவு முதல் விடியற்காலை வரை கொள்ளை கும்பல் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக வேலூரில் இருந்து பள்ளிகொண்டா டோல்கேட் இடைப்பட்ட பகுதியில் வாகன ஓட்டிகளை மறித்து செல்போன், நகை, பணம் உள்பட உடமைகளை பறிக்கின்றனர். வழிப்பறியின் போது, வாகன ஓட்டிகளை தாக்குகின்றனர்.

    2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து தோல் மூலப்பொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை, வேலூர் அடுத்த பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    லாரி டிரைவரை தாக்கி அங்கேயே கட்டிப்போட்டு விட்டு லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து, விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி பகுதியில் அந்த லாரியை மீட்கப்பட்டது.

    லாரியை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பிஓடி விட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் வேலூர் மார்க்கமாக வந்து செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×