என் மலர்

  செய்திகள்

  முக்கொம்பு அணையை எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்
  X

  முக்கொம்பு அணையை எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார். #MukkombuDam #EdappadiPalaniswami
  சென்னை:

  மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

  182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

  இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மதகு (14-வது மதகு) இடிந்து விழுந்தது.  முக்கொம்பு அணையில் அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கரூர் சாலை பகுதியில் இருந்து திருச்சி-சேலம் சாலை வாத்தலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

  இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் முக்கொம்பு சென்று உடைந்த கொள்ளிடம் ஆற்று பாலத்தை பார்வையிடுகிறார்.  

  முக்கொம்பில் கொள்ளிடம் பாலத்தில் உடைந்த பகுதியில் இன்று சீரமைப்பு பணிகள் தொடங்கின. இந்த பணி ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத எந்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். #MukkombuDam #EdappadiPalaniswami

  Next Story
  ×