search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாஸ் மூலம் 1.20 லட்சம் பயணிகள் பயணம்
    X

    1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாஸ் மூலம் 1.20 லட்சம் பயணிகள் பயணம்

    1000 ரூபாய் மாதாந்திர பயண அட்டையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. #BusFareHike

    சென்னை:

    பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு சென்னை மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. தினமும் 40 லட்சம் பயணிகள் பஸ்சில் பயணம் செய்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    ரெயில், ஷேர் ஆட்டோக்களை பஸ் பயணிகள் அதிகம் நாடினார்கள். இதனால் தினசரி இயக்கப்படும் 3000 மாநகர பஸ்களில் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    தற்போது 1200 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை பாஸ்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

    ஒருநாள் பயண பாஸ் முறை கைவிடப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்திற்கு அதிக இழப்பு ஏற்படுவதால் அத்திட்டம் கைவிடப்பட்டு மாதாந்திர பாஸ் திட்டம் மட்டும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

     


    தற்போது மாதம் முழுவதும் மாநகர பஸ்களில் எங்கும் பயணம் செய்து கொள்ளக்கூடிய ரூ.1000 பஸ் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சலுகை கட்டண பயணமும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தினமும் பயணம் செய்யக்கூடிய பயண அட்டைக்கு மூன்றில் ஒரு பங்கு சலுகை அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லக் கூடியவர்கள் அதிகம் இதனை பயன்படுத்துகிறார்கள். 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் இச்சலுகை பயணத்தில் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல 1000 ரூபாய் மாதாந்திர பயண அட்டையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அந்த பயண சலுகையை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு மாதத்திற்கு ரூ.12 கோடி வருவாய் ஒரு மாதத்திற்கு முன்பே கிடைத்து விடுகிறது.

    ரூ.1000 பயண அட்டை திட்டம் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாக இருந்த போதிலும் அதனை கைவிடுவதாக இல்லை என்றே தெரிகிறது.

    ஒரு பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் 2 அல்லது 3 பஸ்களில் மாறி மாறி பயணம் செய்யக் கூடியவர்களுக்கு ரூ.1000 பஸ் பாஸ் பயன் உள்ளதாக இருப்பதால் அதிகளவு விற்பனையாகிறது.

    ஒன்றிற்கும் மேற்பட்ட பஸ்கள் மாறி செல்வதால் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் தினசரி பஸ் பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் மாதாந்திர பஸ் பாஸ்க்கு மாறி வருகிறார்கள். இதனால் அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால் ரூ.1000 மாதாந்திர பாசை உயர்த்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் அப்படிப்பட்ட எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×