search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி: சென்னையில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்
    X

    வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி: சென்னையில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்

    சென்னையில் உள்ள ‘எய்டு இந்தியா’ அமைப்பு சார்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பையொட்டி திரையுலகினர், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உதவிகரம் நீட்டப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் உள்ள ‘எய்டு இந்தியா’ அமைப்பு சார்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 2 கன்டெய்னர்களில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தற்போது 3-வது முறையாக நாளை (திங்கட் கிழமை) அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து ‘எய்டு இந்தியா’ அமைப்பின் இணை செயலாளர் தாமோதரன் கூறுகையில், “மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சேகரிக்கப்படும் நிவாரண பொருட்களை நல்ல முறையில் ‘பேக்’ செய்து அனுப்பி வருகிறோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்”, என்றார். 
    Next Story
    ×