search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீரானது வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து குமாரபாளையம், மற்றும் பரமத்திவேலூர் வட்டத்தைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் அக்ரஹாரம், மணிமேகலை வீதியில் வசித்து வந்த 58 குடும்பங்களை சேர்ந்த 176 பொதுமக்கள் குமாரபாளையம் டவுன் பகுதியில் உள்ள நடனவிநாயகர் திருமணமண்டபத்திலும், குமாரபாளையம் அக்ரஹாரம், அண்ணாநகரில் வசித்து வந்த 62 குடும்பங்களை சேர்ந்த 183 பொதுமக்கள் குமாரபாளையம், புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், குமாரபாளையம் அமானிகிராமம், கலைமகள் வீதியில் வசித்து வந்த 63 குடும்பங்களை சேர்ந்த 141 பொதுமக்கள் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திலும், குமாரபாளையம் அமானி கிராமம், கலைமகள் வீதியில் வசித்து வந்த 59 குடும்பங்களை சேர்ந்த 130 பொதுமக்கள் குமாராபளையம் சி.எஸ்.ஐ பள்ளியிலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம், நாட்டாகவுண்டன் புதூரில் வசித்து வந்த 36 குடும்பங்களை சேர்ந்த 140 பொதுமக்கள் நாட்டான்கவுண்டர் புதூர், நடுநிலைப்பள்ளியிலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் வசித்து வந்த 90 குடும்பங்களை சேர்ந்த 302 பொதுமக்கள் பாவடித் தெரு, செங்குந்தர் திருமண மண்டபத்திலும், பள்ளிபாளையம் நகரப்பகுதியில் வசித்து வந்த 77 குடும்பங்களை 229 பொதுமக்கள் ஆவாரங்காடு, நகராட்சி திருமண மண்டபத்திலும், பள்ளிபாளையம் நகரப்பகுதியில் வசித்து வந்த 108 குடும்பங்களை சேர்ந்த 345 பொதுமக்கள் சத்யாநகரில் உள்ள சவுண்டேஸ்வரி திருமண மண்டபத்திலும், சோழசிராமணிகிராமம், மீனவர்தெருவில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 68 பொதுமக்கள் சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசித்து வந்த 668 குடும்பங்களை சேர்ந்த 806 ஆண்கள், 898 பெண்கள் மற்றும் 384 குழந்தைகள் என 2088 பொதுமக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் அருளரசு, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மாலதி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×