search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட கோவில்களில் பொதுவிருந்து
    X

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட கோவில்களில் பொதுவிருந்து

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொது விருந்து நடந்தது.
    திருவாரூர்:

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொது விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், செயல் அதிகாரி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.

    திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×