search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்துக்கு காரில் கடத்தப்பட்ட 700 மதுபாட்டில்கள் பறிமுதல்- டிரைவர் கைது
    X

    காஞ்சீபுரத்துக்கு காரில் கடத்தப்பட்ட 700 மதுபாட்டில்கள் பறிமுதல்- டிரைவர் கைது

    புதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு காரில் கடத்தப்பட்ட 700 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மதுபானங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதுபோல் மாவட்ட எல்லை முழுவதும் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மதுபானம் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனிச்சம் குப்பம் என்ற இடத்தில் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணிக்கு புதுவையிலிருந்து அதி வேகமாக வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 700-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் புதுவை மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மதுபானம் கடத்தியது தெரியவந்தது. மேலும் கார் டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யார் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் (வயது 32) கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கார் கோட்டகுப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    Next Story
    ×