search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிக்க 100 காமிராக்கள்
    X

    பழனி வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிக்க 100 காமிராக்கள்

    பழனி வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க 100 காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவற்றை பாதுகாக்கும் பணியில் பழனி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி அருகே பாப்பம்பட்டி, காவலப்பட்டி, குதிரையாறு அணைப்பகுதி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் ஆனைமலை வனச்சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 6 பீட் பகுதிகளில் வனவிலங்குகளை கண்காணிக்க காமிராக்களை பொருத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை முடிவு செய்தது. அதன்படி தற்போது ஆனைமலை வனச்சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 6 பீட் பகுதிகளில் தற்போது 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த காமிராக்கள் ஒவ்வொன்றும் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து 7½ மீட்டர் தூரத்தில் நடமாடும் விலங்குகளை புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவை.

    முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகள் முதல் யானை உள்ளிட்ட பெரிய விலங்குகளின் நடமாட்டத்தை இந்த காமிராக்கள் மூலம் துல்லியமாக கண்டறியலாம்.

    வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் போது மட்டும் இந்த கேமராக்கள் செயல்படும். மற்ற நேரங்களில் காமிராவின் இயக்கத்தை தானாக நிறுத்தும் வகையில் ஒரு கருவியும் காமிராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த காமிரா மூலம் எடுக்கும் படங்கள் அதில் உள்ள தற்காலி நினைவகத்தில் சேமிக்கப்படும். அதன் மூலம் எங்களால் எந்தெந்த பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×