என் மலர்

  செய்திகள்

  கொடைக்கானல் அருகே 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்
  X

  கொடைக்கானல் அருகே 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானல் அருகே பாதை பிரச்சினையில் 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

  பெரும்பாறை:

  கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 22). தனது உறவினர் அமுதாவின் தோட்டத்துக்கு சென்றுள்ளார். பூம்பாறை பகுதியைச் சேர்ந்த பஞ்சம்மாளுக்கும், அமுதாவின் மகன் விஜய்க்கும் பொதுப்பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

  இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக பஞ்சம்மாளும், விஜயும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இதனை பாண்டியராஜன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சம்மாள் அவரது கணவர் தனபால் மற்றும் உறவினர்கள் அரிவாள், கம்புகளுடன் வந்து பாண்டியராஜன் தரப்பை கடுமையாக தாக்கியுள்ளனர்.

  பின்பு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டியராஜன், அமுதா மற்றும் விஜயை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் கொடைக்கானல் மற்றும் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

  இது குறித்து கொடைக்கானல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பஞ்சம்மாள், தனபால் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×