search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்- போலீசார் விசாரணை
    X

    திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்- போலீசார் விசாரணை

    திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் போத்திராஜா. இவரது மகள் திவ்யா (வயது 19). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு அலங்காநல்லூரைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    திவ்யா நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த செல்வமணி, நாம் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறி திவ்யாவை கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கிடையே வேலை முடிந்து வீடு திரும்பிய போத்திராஜா, வீட்டில் திவ்யா மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது திவ்யாவை செல்வமணி கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக போத்திராஜா, அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×