என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
    X

    ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

    புதுவை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்கிற ரிலையன்ஸ் பாபு (வயது 42). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 21-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொலையில் தொடர்புடைய சங்கர் கணேஷ் உள்பட 8 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

    மேலும் ரிலையன்ஸ் பாபு கொலையில் முக்கிய குற்றவாளியான தாதா மணிகண்டன் உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரிலை யன்ஸ் பாபு கொலையில் தொடர்புடைய குயிலாப் பாளையத்தை சேர்ந்த வீரமணி (32) என்பவரை நேற்று ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ரிலையன்ஸ் பாபு கொலையில் தொடர்புடைய சங்கர் கணேஷ், காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலையிலும் தொடர்பு உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×