என் மலர்
செய்திகள்

கோபி அருகே ரோட்டின் ஓரமாக கிடந்த ஆண் பிணம் - போலீஸ் விசாரணை
கோபி அருகே ரோட்டின் ஓரமாக ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பிரிவு பகுதியில் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டின் ஓரமாக ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவரது வலது கையில் சத்தியா என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் வாகனம் மோதிய அடையாளமும் இல்லை. உடலில் எந்த காயமும் இல்லை.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இறந்த கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story