என் மலர்

  செய்திகள்

  வீராம்பட்டினத்தில் மின் கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை
  X

  வீராம்பட்டினத்தில் மின் கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீராம்பட்டினத்தில் முதல் மனைவி இறந்த நினைவில் 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் வாலிபர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார்.

  பாகூர்:

  வீராம்பட்டினம் நாகூ ரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்ற கத்திரிமுத்து (வயது 30). ரவுடியான இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

  இதற்கிடையே இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து போனதால் 2-வதாக ஒரு பெண்ணை கார்த்தி திருமணம் செய்தார். அந்த பெண்ணும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கார்த்தி விரக்தியுடன் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி படுகாயம் அடைந்தார்.

  புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×