என் மலர்
செய்திகள்

தர்மபுரியில் பாமக பொதுக்குழுகூட்டம்- டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு
தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுகூட்டம் இன்று நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
தர்மபுரி:
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுகூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்சியின் வளர்ச்சி பணி, போராட்டம் குறித்து டாக்டர் ராமதாஸ் விளக்கினார். மேலும், அவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளை சந்திக்க அரசு அனுமதி மறுத்ததையும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று விவசாயிகளை சந்தித்தது குறித்தும் விளக்கி பேசினார்.
Next Story






