என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே கார் மோதி தங்கை வீட்டுக்கு சென்ற விவசாயி பலி
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே கார் மோதி தங்கை வீட்டுக்கு சென்ற விவசாயி பலி

    திருவெண்ணைநல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டல குழியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). விவசாயி.இவரது தங்கை வீடு திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூரில் உள்ளது. நேற்று காலை முருகன் தனது தங்கை வீட்டுக்கு சென்று இருந்தார். இரவு 8 மணி அளவில் முருகன் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அங்குள்ள பஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று முருகன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.

    பலத்த காயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×