என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டத்தில் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்2 Aug 2018 2:24 PM GMT
மார்த்தாண்டத்தில் வீட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளி கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் முளங்குழி காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை(வயது64). தொழிலாளி. இவர் நேற்று வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். பல்லன்விளை அருகே வரும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் கோட்டார் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி மகேஷ்வரி(35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அய்யப்பன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மகேஸ்வரி மயங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மகேஸ்வரி இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட் சுமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மகேஸ்வரி அதிக அளவு மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Next Story
×