என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை காந்திஜி சாலையில் ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
    X

    தஞ்சை காந்திஜி சாலையில் ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

    தஞ்சை காந்திஜி சாலையில் ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை காந்திஜி சாலையில் வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஜவுளி கடைகள், ஓட்டல் போன்ற 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    காந்திஜி சாலையில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது வாகனங்களை அப்படியே ரோட்டில் விட்டு விட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பணியில் உள்ளனர். இந்த நிலையில் கடைக்கு வருபவர்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    காந்திஜி சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அப்புறப் படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×