என் மலர்

  செய்திகள்

  பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.35 லட்சம் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம்
  X

  பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.35 லட்சம் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.35.96 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
  பல்லடம்:

  பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.35.96 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

  பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூரில் ரூ.8.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு குழாய் மின் மோட்டார் வசதி, புளியம்பட்டியில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆகியவற்றின் திறப்பு விழாவும் வடுகபாளையம்புதூரில் அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ. 12.26 லட்சத்தில் சுற்றுச்சுவர், கிருஷ்ணாபுரம் ஊராட்சி செங்கோடம்பாளையத்தில் ரூ.8.70 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றுக்கு பூமி பூஜையும் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, பொறியாளர் செந்தில், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சித்துராஜ், கரைப்புதூர் விஸ்வநாதன், மாணிக்கம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ஆறுமுத்தாம்பாளையம் பழனிசாமி, படையப்பா மூர்த்தி, பாலசுப்பிரமணியம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×