search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டிடத் தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்
    X

    கட்டிடத் தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்

    கோவையில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ், பொது செயலாளர் பாலாஜி ரங்கசாமி, பாலகிருஷ்ணன், தியாகராஜன், நந்தினி, சோம சுந்தரம் உள்ளிட்ட 300 கட்டிட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அதில் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்து 30 நாட்களில் வழங்க வேண்டும். ஈமசடங்கு உதவித் தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பாக வழங்க வேண்டும்.

    விபத்து எங்கு நடந்தாலும், அதனால் எப்போது மரணம் நிகழ்ந்தாலும் இழப்பீடு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். பிரசவ உதவித்தொகை குறைந்த பட்ச சம்பள சட்டப்படி கணக்கிட்டு 6 மாத கால சம்பளமாக ரூ. 90 ஆயிரம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். வைப்பு நிதி திட்டங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். திருமண உதவி நிதி ரூ 1 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்றுஉள்ளது.

    இது குறித்து மாவட்ட தலைவர் செல்வராஜ் கூறும் போது, தமிழகத்தில் 55 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 28 லட்சம் பேர் வாரியத்தில் பதிவு செய்து உள்ளனர். இதனை 10 லட்சம் பேர் புதுப்பிக்க தவறி விட்டனர். இதனால் அவர்களுக்கு நல வாரிய பலன் கிடைக்கவில்லை. 37 லட்சம் பேர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லை. அவர்களையும் சேர்த்து நல வாரியத்தின் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #tamilnews
    Next Story
    ×