என் மலர்
செய்திகள்

அன்னூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அன்னூர்:
கோவை வடக்கு மாவட்டம், அன்னூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கோவில் வருமானம் கோவிலுக்கே, ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அன்னூர் பயணியர் மாளிகை முன்பு இந்து முன்னணி கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் 5.25லட்சம் ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமாக இருந்தது. தற்போது 4.75 லட்சம் ஏக்கர் நிலமாக சுருங்கி விட்டது. கோவில் குத்தகை வருமானம் குறைவாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. சிலை திருட்டு அதிகமாக உள்ளது. அரசு கண்டு பிடிப்பதில் மெத்தனமாக உள்ளது என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்து கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கும் ஆலய தரிசனகட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மேற்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பில் பல்லடம் கொசவம் பாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் சிறப்புரை யாற்றினார். திருப்பூர் மேற்கு மாவட்ட இந்துமுன்னணி செயலாளர் மணி மற்றும் சர்வேஸ்வரன், லோகநாதன் உள்பட ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.






