search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொருக்குப்பேட்டையில் கோவில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.1½ லட்சம் கொள்ளை
    X

    கொருக்குப்பேட்டையில் கோவில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.1½ லட்சம் கொள்ளை

    கொருக்குப்பேட்டையில் கோவில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை பசுவன் தெருவில், ராமலிங்க சவுடேஸ்வரி தேவி கோவில் உள்ளது.

    இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொது மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.

    இதுவரை கிடைத்த பணத்தை கோவில் கேஷியர்கள் சத்திரபதி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நேற்று இரவு 7.30 மணி அளவில் எண்ணி சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 பேர் அங்கு வந்தனர்.

    திடீர் என்று அவர்கள் 2 பேரும் கத்தியை காட்டி, கோவில் கேஷியர்களிடம் இருந்த பணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். பின்னர் அவர்களை கட்டிப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலுக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையர்களின் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

    பணத்தை பறிகொடுத்த கோவில் கேஷியர்கள் சந்திரபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தெரிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    தப்பி ஓடிய கொள்ளையர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×