என் மலர்
செய்திகள்

X
பல்லடத்தில் கடன் தொல்லையால் பூ வியாபாரி தற்கொலை
By
மாலை மலர்27 July 2018 2:46 PM IST (Updated: 27 July 2018 2:46 PM IST)

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடன் தொல்லையால் பூ வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் குன்னங்கல் பாளையம் பிரிவு சிவன்மலை ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). பூ வியாபாரி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை செல்வராணி அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த செல்வ ராணி அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இது குறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூ வியாபாரி சிவக்குமார் சிறுசிறு கடன் வாங்கி இருந்தார். அதனை செலுத்த முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகக போலீசார் கூறினர்.

Next Story
×
X