என் மலர்
செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
மேட்டுப்பாளையத்தில் நோய் கொடுமை அதிகமானதால் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
மேட்டுப்பாளையம் தர்மாபுரி கவிமணிய தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவரது மனைவி திரிபுரசுந்தரி (வயது 77).
இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகன் ரவி (52) பாதுகாப்பில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று திரிபுர சுந்தரிக்கு நோய் கொடுமை அதிகமாகி உள்ளது. ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த திரிபுரசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை ரவி வீட்டுக்குவந்து பார்த்த போது தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ரவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஏட்டு சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

Next Story