search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
    X

    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடும் வறட்சி காணப் பட்டது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. இந்த நேரத்தில் கோடை சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

    இதனால் சுற்றுலா தலங்களை கண்டு களித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், மலை அணில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் முதுமலை பகுதிக்கு திரும்பியது.

    தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரூ- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காடு- மசினகுடி சாலையோரம் வனவிலங்குகள் அதிகமாக தென்படு கிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வனத்துக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறாமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு களிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் வாகனங்களை நிறுத்தி கூச்சலிட்டு வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    அவ்வாறு தொந்தரவு செய்யும் போது காட்டு யானைகள் திடீரென தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×