search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரியத்தில் 13 மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு
    X

    வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரியத்தில் 13 மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு

    சென்னை வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரியத்தில் 13 மாடி கட்டிடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளன. 3 மாடி கொண்ட இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்து விட்டு புதிதாக 13 மாடிகள் கொண்ட குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும், அதனால் வீடுகளை காலி செய்யும்படி அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    திடீரென்று வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் தரும்படி வலியுறுத்தினர். மேலும் 13 மாடி கொண்ட குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்றும் முன்பு இருந்த 3 மாடி கொண்ட குடியிருப்புகளை கட்டி தர வேண்டும் என்று கூறினர். இதை வலியுறுத்தி இன்று காலை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாசர்பாடியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    சாலையோரம் கைகளை கோர்த்தப்படி அணிவகுத்து நின்றனர்.

    இதையடுத்து அங்கு எம்.கே.பி. உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிலட்சும், புகழேந்தி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×