search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசிய காட்சி.
    X
    நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசிய காட்சி.

    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது- கவர்னர் பேச்சு

    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக திருச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    திருச்சி:

    திருச்சி தனியார் மருத்துவமனையில் இன்று உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உடலுறுப்பு தானம் என்பது ஒரு நபரின் உடல் பாகம் நீக்கப்பட்டு சட்டபூர்வமாக, உயிருடன் இருக்கும் போதோ? அல்லது இறந்த பின்னர் உறவினர்கள் அனுமதியுடன் செய்யப்படுகிறது. இந்த தானம் ஆராய்ச்சிக்கோ? அல்லது பிற நபர்களுக்கு பொறுத்துவதற்காகவும் இருக்கலாம்.

    பொதுவாக சிறுநீரகம், இதயம், கல்லீரல், கணையம், குடல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை ,தோல் போன்றவை தானம் செய்யப்படுகின்றன. நுரையீரல் , சிறுநீரகம் அல்லது குடல்களின் பாகங்கள் அல்லது திசுக்களை தானம் செய்யலாம். ஒரு நபர் இறக்கும் போது முழுவதுமாக தானம் பெறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்ட உடல் உறுப்புகள் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தயாராக இருக்கும் நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.

    பெரும்பாலான உடல் உறுப்புகள் உடலை விட்டு எடுத்த பின்னர் சில மணி நேரங்களே செயல்படும். அவ்வாறான உறுப்புகள் அருகில் உள்ள நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.

    முதன் முதலாக 1954ல் ரோனால்ட் லீ ஹெரிக் என்ற இரட்டை சகோதரர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. முன்னணி அறுவை சிகிச்சை நிபுணரான ஜோசப் முர்ரே 1990 ஆம் ஆண்டில் உடலியல் மருத்துவத்தில் நோபல் பரிசைப் பெற்றார்.


    நம் நாட்டு புள்ளி விவரங்கள் படி, கல்லீரல் கிடைக்காமல் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலுறுப்புகள் கிடைக்காமல் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரம் பேர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காகவும், 20 ஆயிரம் பேர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கின்றனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #TNGovernor #BanwarilalPurohit
    Next Story
    ×