என் மலர்
செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். #MetturDam #EdappadiPalanisamy #Cauvery #BJP #NoconfidenceMotion
சேலம்:
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்து விட்டார். மேட்டூர் அணையை திறந்து வைத்தபின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடைமடை செல்லும் அளவுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அணை வற்றும்போது விவசாயிகள் இலவசமான வண்டல் மண் எடுக்கலாம். சத்துணவு திட்டத்துக்கு முட்டை வாங்கியதில் எந்த முறைகேடும் இல்லை.
ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது.
காவிரி பிரச்சனையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை. அ.தி.மு.க எம்பிக்கள் தான் அதற்காக 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடைபெறவிடாமல் செய்தனர். அப்போது நமக்கு யாரும் ஆதரவு தரவில்லை என தெரிவித்தார். #MetturDam #EdappadiPalanisamy #Cauvery #BJP #NoconfidenceMotion
Next Story






