என் மலர்
செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி பிளஸ் 2 மாணவி கற்பழிப்பு - என்ஜினீயருக்கு வலைவீச்சு
ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-2 மாணவியை கற்பழித்த என்ஜினீயர் ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜ புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 27) என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும் சுந்தரராஜ புரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். விடுமுறைக்கு ராஜேஷ் குமார் ஊருக்கு வரும்போதேல்லாம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியிடம் அடிக்கடி நெருங்கி பழகியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ராஜேஷ்குமார் இலந்தை குளம் கண்மாய் பகுதியில் காதலியிடம் அத்துமீறினார். அப்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியை கற்பழித்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்.

Next Story