search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 82 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 82 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 82 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டப்படுவதால் தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவுப்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் காவேரி, ரவிக்குமார் ஆகியோர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 324 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    மேலும் 25 சரக்கு வாகனம், 2 தனியார் பஸ்கள், 2 சுற்றுலா பஸ் உள்ளிட்ட 55 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல் 82 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக வேகம், லைசென்ஸ், ஹெல்மேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட விதிமுறை மீறி வண்டி ஓட்டிய 239 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ. 23 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டன. #tamilnews
    Next Story
    ×