search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
    X

    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம்:

    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    ஊராட்சி செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது.

    அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட பொருளாளர் கட்டக்குடி டி.முருகேசன் தலைமை தாங்கினார். வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசினார்.

    இதில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி முருகையன், கணினி உதவியாளர்கள் சங்க நிர்வாகி மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ராஜா, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி எழுத்தர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கி அரசாணை வழங்கிட வேண்டும். கணினி உதவியாளர்கள் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணி மேற்பார்வையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. 
    Next Story
    ×